மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 ஜன 2021

'இது ட்ரெய்லர் தான்': குண்டுவெடிப்பு இடத்தில் கிடைத்த கடிதம்!

'இது ட்ரெய்லர் தான்': குண்டுவெடிப்பு இடத்தில் கிடைத்த கடிதம்!

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு, ஒரு ட்ரெய்லர் தான் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. சக்தி குறைந்த குண்டு வெடித்ததில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 கார்கள் சேதம் அடைந்துள்ளன.

டெல்லியின் முக்கிய பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இது தீவிரவாத தாக்குதலாக கூட இருக்கலாம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நேற்று தெரிவித்திருந்தார்.

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது ஒரு ட்ரெய்லர் தான் என சம்பவ இடத்தில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டது குறித்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் ஈரானின் சதி இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே சம்பவம் நடந்த போது இருவர் காரில் வந்து இறங்கியதும் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   மேலும் டெல்லியில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 31 ஜன 2021