மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 ஜன 2021

தேசிய கொடி அவமதிக்கப்பட்டது தேசத்துக்குப் பெரிய துக்கம்: பிரதமர் மோடி

தேசிய கொடி அவமதிக்கப்பட்டது தேசத்துக்குப் பெரிய துக்கம்: பிரதமர் மோடி

குடியரசு தினத்தன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுவதைப் பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியில் பிரதமர் நாட்டு மக்களுடன் உரையாடினார்.

அப்போது, “டெல்லியில், ஜனவரி 26ஆம் தேதியன்று மூவர்ணக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானம், தேசத்துக்குப் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் நாட்டு மக்கள் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளனர். வன்முறை எப்போதும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது” என்றார்.

கொரோனா தடுப்பூசி குறித்துப் பேசிய அவர், “நம் நாடு உலகின் மிகப்பெரிய கோவிட் பெருந்தொற்றுத் தடுப்பு இயக்கத்தைச் செயல்படுத்தி வருகின்றது. மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தோடு கூடவே, உலகிலேயே மிக விரைவாக நாம் நமது குடிமக்களுக்குத் தடுப்பூசிகளையும் போட்டு வருகிறோம். வெறும் 15 நாட்களில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா போராளிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பணிக்கு, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிற்கு 18 நாட்களும், பிரிட்டன் போன்ற நாட்டிற்கு 36 நாட்களும் பிடித்தன.

75ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு, நாட்டில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு இம்மாதம் மிகச்சிறந்த மாதமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 31 ஜன 2021