மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 ஜன 2021

9, 11ஆம் வகுப்பு, அனைத்து கல்லூரி வகுப்புகளுக்கு அனுமதி!

9, 11ஆம் வகுப்பு, அனைத்து கல்லூரி வகுப்புகளுக்கு அனுமதி!

தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக 2020 மார்ச் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு ஊரடங்கு தளர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான ஊரடங்கு தளர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் அடிப்படையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை / முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.

9 மற்றும் 11ஆம் வகுப்புகள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றித் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்குகள் நேரக் கட்டுப்பாடு இன்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன. நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளிலும் 100 சதவிகித இருக்கைகளைப் பயன்படுத்திச் செயல்பட அனுமதி. கிரிக்கெட் உட்பட விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

மக்கள் குறை தீர்க்கும் நாள் போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இது தவிரச் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்திலும் தடை தொடரும். தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின் படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 31 ஜன 2021