மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 ஜன 2021

60 ஆண்டுகளாக குகையில் வாழும் சாமியார்: ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை!

60 ஆண்டுகளாக குகையில் வாழும் சாமியார்: ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை!

60 வருடங்களாக குகையில் வாழும் சாமியார் ஒருவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை அளித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் இந்தக் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்தப் பணியை பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடத்தி, கோயில் கட்டுமானப் பணிகளை வரும் 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான நிதி திரட்ட 10, 100 மற்றும் 1000 ரூபாய் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராமர் கோயில் கட்டுமான பணிக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு எனப் பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், 83 வயதான குகை சாமியார் ஒருவர் வழங்கிய நன்கொடை நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள குகையில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் சுவாமி சங்கர்தாஸ். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கப்படுவதை அறிந்த அவர், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1 கோடி நிதியை கோயில் கட்ட நன்கொடையாக வழங்க தீர்மானித்தார்.

அவரது கணக்கில் போதிய நிதி இருப்பதை உறுதி செய்த வங்கி அதிகாரிகள், இதற்கான நிதி திரட்டும் உள்ளூர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த அவர்களிடம் சுவாமி சங்கர்தாஸ் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். குகையில் வசித்து வரும் சாமியார், இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குகை சாமியார் சுவாமி சங்கர்தாஸ், “நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குகையில் வசித்து வருகிறேன். என்னை காண வருகை தரும் பக்தர்களிடமிருந்து வரும் நன்கொடைகளில் நான் வாழ்கிறேன். ‘விஸ்வ இந்து பரிஷத்’தின் பிரசாரத்தைப் பற்றி அறிந்ததும், ராமர் கோயிலுக்கான எனது சேமிப்புத் தொகையை நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன். இந்தக் கோயிலுக்குத்தான் நாம் அனைவரும் நீண்ட காலமாக கனவு காண்கிறோம்” என்று கூறியுள்ளார்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

ஞாயிறு 31 ஜன 2021