மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

வாக்கு வேட்டை மத்தியில் ராகுல் காந்தி நடத்திய ஜாலி டாக்...

வாக்கு வேட்டை மத்தியில் ராகுல் காந்தி நடத்திய  ஜாலி டாக்...

கொங்கு மாவட்டத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது யூடியூப் சேனலுடன் ராகுல் காந்தி காளான் பிரியாணி வெங்காய தயிர் பச்சடி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சின்னவீரம்பாளையம் அருகே 'வில்லேஜ் குக்கிங்' என்னும் யூ டியூப் சேனல் நடத்தும் சமையல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அதில் ராகுல் காந்தி வெங்காய தயிர் பச்சடி செய்து அசத்தினார்.அப்போது யூ டியூபர் சொல்வது போல பொருட்கள் பெயரை தமிழில் வெங்காயம்,தயிர்,கல்லுப்பு என ஒவ்வொன்றாக சொல்லி வெங்காய தயிர் பச்சடி தயார் செய்தார்.அவர்களுடன் சேர்ந்து ஓலை பாயில் அமர்ந்து வாழை இலையில் உணவு சாப்பிட்டார்.உணவை சாப்பிட்ட பிறகு 'ரொம்ப நல்லாருக்கு' என தமிழில் கூறி ஆச்சரியப்படுத்தினார்.

அவர்களின் எதிர்கால திட்டம், தாங்கள் 70 லட்ச சந்தாதாரர்களுக்கு உணவு வழங்குவது என்பதைக் கேட்டு தெரிந்து கொண்ட ராகுல் காந்தி,அது நடைபெற்றால் தானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாகக் கூறினார்.

அந்த யூடியூப் சேனல் அமெரிக்கா சென்று சமையல் நிகழ்ச்சி நடத்த உதவி செய்வதாகவும் உறுதியளித்தார்.இந்த நிகழ்வு நடக்கும் போது உடனிருந்த கரூர் எம்.பி ஜோதி மணி உரையாடலை மொழிப்பெயர்ப்பு செய்தார்.

கொங்கு மண்டல பிரச்சாரத்தை மக்களுடன் சமபந்தி உணவு,டீ கடையில் தேநீர்,வாழை இலை சாப்பாடு,மாட்டு வண்டி பயணம் என கலகலப்பாக நிறைவு செய்திருக்கிறார் ராகுல் காந்தி.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 30 ஜன 2021