மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

பெண்ணை ஏமாற்றிய வழக்கு: காவலருக்குக் கட்டாய ஓய்வு ரத்து!

பெண்ணை ஏமாற்றிய வழக்கு: காவலருக்குக் கட்டாய ஓய்வு ரத்து!

திருமணம் செய்து கொள்வதாகப் பெண்ணுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகக் காவலருக்குக் கட்டாய ஓய்வு  வழங்கிய உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம்  ரத்து செய்துள்ளது.

வேலூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றிய சிவக்குமார் என்பவர், 17 வயது பள்ளி மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலமுறை வெளியில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை  செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், வேறு பெண்ணை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த புகார் குறித்து விசாரித்த ஆயுதப்படை டிஎஸ்பி, ஆயுதப்படை காவலர் சிவக்குமார் மீது பாலியல் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை. பெண்ணை ஏமாற்றியது மட்டும் நிரூபணமானது என அறிக்கை அளித்துள்ளார். இந்த அறிக்கையை ஏற்க மறுத்த வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி சிவகுமாருக்குக் கட்டாய ஓய்வு அளித்து 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உறுதி செய்ததை எதிர்த்து சிவகுமார் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, பாலியல் வன்கொடுமை செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக்கூறி சிவகுமாருக்குக் கட்டாய பணி ஓய்வு அளித்துப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

இந்த வழக்கை மீண்டும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்க வேண்டும் என்றும் இரண்டு மாதத்தில் விசாரணை முடித்துக் குறைந்த தண்டனை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட நாளிலிருந்து 50 சதவிகித ஊதியத்தைப் பெற மனுதாரருக்கு உரிமை இருப்பதாகவும் நீதிபதிகள் இந்த உத்தரவின் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

சனி 30 ஜன 2021