மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

கவியருவி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட குரங்கருவி...

கவியருவி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட குரங்கருவி...

ஆழியார் பகுதியில் அமைந்திருக்கும் குரங்கருவி பெயர் 'கவிஅருவி' என மாற்றம் செய்யப்பட்டு வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது குரங்கருவி.இதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றர். சுற்றுலா பயணிகளை மேலும் கவர எண்ணிய வனத்துறை முதற்படியாக அதை 'கவி அருவி' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.

மேலும் வனத்துறை சார்பாக அருவி அருகில் இருக்கும் சுவர்களில் புள்ளிமான், வரையாடு போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

குரங்கு சிற்பங்களை அமைத்து அதில் சங்க இலக்கிய பாடல்களில் குரங்குகள் பற்றிய குறிப்புகளை கல்வெட்டுகளில் குறிப்பிட உள்ளனர்.அருவி அருகில் நீச்சல் குளம், கான்கிரீட் தளம் என பூங்கா போல அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இது சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் வடிவமைக்கவுள்ளதாகக் கூறுகின்றனர்.விரைவில் கவியருவி பெரிய சுற்றுலாத் தலமாக மாறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றர்.

தமிழ்ச் சங்க இலக்கியங்களில் கவி என்ற சொல்லுக்கு குரங்கு என்ற பொருள் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பெயர் மாற்ற நடவடிக்கை பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

சனி 30 ஜன 2021