மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

சென்னை: 70 மினி பஸ்கள் நிறுத்தம்!

சென்னை: 70 மினி பஸ்கள் நிறுத்தம்!

மிக குறைந்த அளவில் பயணிகள் வருகையால் சென்னையில் இயக்கப்பட்ட 70 மினி பஸ்கள் நிறுத்தப்படுவதாக மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் சிற்றுந்து போக்குவரத்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாநகரப் பேருந்துகள் செல்ல முடியாத குறுகலான பாதையில் இந்த பஸ்கள் இயக்கப்பட்டன.

சென்னையின் விரிவாக்க பகுதிகளுக்கும் மினி பஸ்கள் விடப்பட்டன. ஆட்டோவை விட குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டதால் நகரின் உள்பகுதிகளுக்குச் சென்று வர இது உதவியாக இருந்தது. கூலி தொழிலாளர்கள், பெண்கள் அதிகளவு இந்த பஸ்களைப் பயன்படுத்தி வந்தனர். ஆரம்பத்தில் இதற்கு அதிக வரவேற்பு இருந்ததால் 200 பஸ்கள் வரை இயக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு மினி பஸ்களில் மக்கள் அதிகம் பயணம் செய்யவில்லை. கூலி தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சொந்த ஊர்களுக்குச் சென்றதாலும், பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த தொடங்கிவிட்டதாலும் கூட்டம் இல்லை.

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் மினி பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் மாநகர பஸ்கள் மட்டுமே முழுமையாக இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து அதிகாரி ஒருவர், “சிறிய பஸ்களில் மிக சொற்ப அளவில்தான் பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மினி பஸ்களை இயக்க ரூ.20 செலவாகிறது. ஆனால், 9 ரூபாய்தான் கிடைக்கிறது.

மேலும் சிறிய பஸ்கள் வரும்வரை மக்கள் காத்திருப்பது இல்லை. ஷேர் ஆட்டோக்களில் ஏறி சென்று விடுகின்றனர். இதனால் அனைத்து சிறிய பஸ்களும் காலியாகவே ஓடுகின்றன. கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு பஸ்களை இயக்கிய போதும் எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் 70 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிக்கூடம் முழுமையாகத் திறக்கப்பட்டால் மினி பஸ்கள் முழுமையாக இயக்கப்படும்” என்று கூறியுள்ளார்

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

சனி 30 ஜன 2021