மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 30 ஜன 2021

ரெயில்களில் உணவுக்கு முன்பதிவு செய்யலாம்!

ரெயில்களில் உணவுக்கு முன்பதிவு செய்யலாம்!

ஆன்லைன் வழியாக உணவு முன்பதிவு செய்து விநியோகம் செய்வதற்கு இந்திய ரெயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. வருகிற 1ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ரெயில் போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. சிறப்பு ரெயில்களாக மட்டும் இயக்கப்படுகின்றன. இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் பயணம் செய்ய முடியும். முன்பதிவு அல்லாத பயணத்துக்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், நாடு முழுவதும் படிப்படியாக ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ரெயில்களில் உணவு விற்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. ரெயில் பெட்டிகளில் உணவு பெட்டி (பேண்ட்ரி கார்) இதுவரையில் இணைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கையில் கொண்டு வரும் உணவைத்தான் சாப்பிடுகிறார்கள். நீண்ட தூரம் செல்லக்கூடிய பயணிகளுக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் ஆன்லைன் வழியாக உணவு முன்பதிவு செய்து விநியோகம் செய்வதற்கு இந்திய ரெயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு என்ன உணவு வேண்டுமோ அதைத் தங்கள் செல்போன் வழியாக ஐ.ஆர்.சி.டி.சி-யால் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்களுக்கு ஆர்டர் செய்யலாம். இதற்கான செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பயணிகளின் பி.என்.ஆர். எண், ரெயில் எண், இருக்கை எண் அந்த செயலி வழியாகப் பதிவு செய்து உணவு வகைகளை ஆர்டர் செய்தால் விரும்பிய ஹோட்டல்களில் இருந்து உங்கள் இருக்கைக்கு வந்து சேரும். வட இந்திய, தென் இந்திய உணவுகள், பீட்சா, பிரியாணி, பட்டர் சிக்கன், சைனீஸ் உணவு வகைகளும் பெறலாம்.

தரமான உணவுகளைப் பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஐ.ஆர்.சி.டி.சி இந்தச் செயலியை அறிமுகம் செய்துள்ளது. உணவுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் வழியாக செலுத்திவிடலாம்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 30 ஜன 2021