மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 29 ஜன 2021

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது?

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது?

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், மே 4ஆம் தேதி சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பான தேர்வுகள் நடைபெறும், ஜூன் 10ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும், முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

மார்ச் 1ஆம் தேதி முதல் எழுத்துத் தேர்வு நடைபெறும் வரை செய்முறை / புராஜெக்ட் / உள்மதீப்பீடு நடத்த பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிடப்படும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 29 ஜன 2021