மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

எஸ்பிபிக்கு பத்ம விபூஷண் விருது!

எஸ்பிபிக்கு பத்ம விபூஷண் விருது!

இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) மத்திய அரசு நேற்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

இதில் பத்ம விபூஷண் விருது,

முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபே,

மறைந்த பின்னணிப்பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏழு பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷணும், 102 பேருக்கு பத்ம ஸ்ரீயும் வழங்கப்படுகின்றன.

பல்வேறு துறைகளை சேர்ந்த தமிழகத்தின் 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் விவரம் வருமாறு:

பி. அனிதா - விளையாட்டு

சுப்பு ஆறுமுகம் - கலை

சாலமன் பாப்பையா - இலக்கியம் மற்றும் கல்வி- பத்திரிகை துறை

பாப்பம்மாள் - விவசாயம்

பம்பாய் ஜெய ஸ்ரீ ராம்நாத்

மறைந்த கே சி சிவசங்கர் - கலை

மராச்சி சுப்புராமன் - சமூக பணி

மறைந்த பி சுப்பிரமணியன் - வர்த்தகம் மற்றும் தொழில்

மறைந்த டாக்டர். திருவேங்கடம் வீரராகவன் - மருத்துவம்

ஸ்ரீதர் வேம்பு - வர்த்தகம் மற்றும் தொழில்

-பிரியா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 26 ஜன 2021