மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

கட்டணத்துக்கு வட்டி வாங்கும் பாரதியார் பல்கலைக் கழகம்!

கட்டணத்துக்கு வட்டி வாங்கும் பாரதியார் பல்கலைக் கழகம்!

கொரோனா நோய் தொற்று பொது முடக்கத்தால் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆராய்ச்சி மாணவர்கள் ,இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில் கோவையில் இருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் முடியாத நிலையில்,இரண்டாம் செமஸ்டர் வகுப்புகளுக்கான கட்டணத்தை செலுத்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது நிர்வாகம்.

பல்கலைக்கழகத்திற்கு கல்வி கட்டணம் தொடர்பான செய்திகள் கடந்த 15.12.2020 அன்று கிடைத்த பிறகும் ஒவ்வொரு துறைகளுக்கான தகவல் காலந்தாழ்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சில துறை மாணவர்களுக்கு ஜனவரி முதல் வார நாட்களிலும் சிலருக்கு கடைசி வார நாட்களிலும் தகவல் கிடைத்துள்ளது. இது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

29.01.2021 கட்டணம் செலுத்தக் கடைசி நாள் என்றும்,செலுத்தாமல் இருப்பவர்களுக்கு தினமும் ரூ.25 அபராதமாக அதாவது வட்டி வசூலிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலக் கட்டத்தில் பல சிரமங்களை கடந்து கல்வி கட்டணம் செலுத்தி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் குறுகிய காலத்தில் பயன்படுத்தாத ஆய்வகத்துக் கட்டணம் செலுத்தச் சொல்வது மாணவர்களுக்கு கூடுதல் சுமையாகவே இருக்கிறது. ஆன்லைனில் கட்டணம் செலுத்த அனுமதி இல்லாததால், , தொலைவில் இருக்கும் மாணவர்கள் கட்டணச் செலவோடு அதற்காக நேரில் வருவதற்காக பயணச் செலவும் செய்ய வேண்டியுள்ளது.

படித்தவன் தப்பு செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்று பாடியுள்ளார் பாரதி. அவர் பெயரைத் தாங்கிய பாரதியார் பல்கலைக் கழகமே இப்படிச் செய்யலாமோ?

-நிவேதிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

செவ்வாய் 26 ஜன 2021