கிச்சன் கீர்த்தனா: செட்டிநாட்டு முருங்கைக்கீரை அடை!


தமிழ்நாட்டின் சகல பகுதிகளிலும் ‘செட்டிநாடு’ என்கிற அடைமொழியுடன் ஹோட்டல்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான ஹோட்டல்களுக்கும் செட்டிநாட்டின் உணவு கலாச்சாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல... செட்டிநாடு உணவு என்றாலே அசைவம்தான் என்கிற எண்ணத்தையும் இந்த ஹோட்டல்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. செட்டிநாட்டு சைவ உணவுகளும் அசைவ உணவுகளைப் போலவே தனித்துவமானவையே. அதற்கு இந்த முருங்கைக்கீரை அடையே உதாரணம்.
என்ன தேவை?
பச்சரிசி - அரை உழக்கு
புழுங்கல் அரிசி - அரை உழக்கு
துவரம்பருப்பு - அரை உழக்கு
கடலைப்பருப்பு - அரை உழக்கு
உளுத்தம்பருப்பு - அரை உழக்கு
காய்ந்த மிளகாய் - 12
சோம்பு - 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
வெங்காயம் - 3 (மெலிதாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு (மெலிதாக நறுக்கவும்)
மல்லித்தழை - சிறிதளவு (மெலிதாக நறுக்கவும்)
முருங்கைக்கீரை - சிறிதளவு (ஆய்ந்து கொள்ளவும்)
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?