மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

கொரோனா தடுப்பூசி வதந்தி: மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி வதந்தி: மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக, ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இதில் பிஃபைசர், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் நேற்று மாலை 7:30 மணிவரை மொத்தமாக 28,613 முகாம்களில் 16 லட்சத்திற்கும் அதிகமான (16,13,667) சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 61,720 பயனாளிகள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர்.

எனினும் தடுப்பூசி தொடர்பான பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 2 கொரோனா தடுப்பூசிகளும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டது. எனவே தடுப்பூசி குறித்துத் தனி நபரோ, குழுவோ அல்லது அமைப்போ வதந்தி பரப்பினால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உலக நாடுகள் நம்மிடமிருந்து தடுப்பூசி வாங்கத் தயாராக உள்ளன. ஆனால். நம் நாட்டு மக்களில் பலர் அதைப் போட்டுக் கொள்ளத் தயங்குகிறோம். பக்க விளைவுகள் இல்லாத தடுப்பூசிகளே உலகத்தில் இல்லை. கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. எனவே, அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். அரசியல் காரணங்களுக்காக, தடுப்பூசி பற்றி வதந்திகளைப் பரப்பக்கூடாது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

திங்கள் 25 ஜன 2021