மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

வெளியான ‘காட்ஸில்லா vs காங்’ டிரெய்லர் !

வெளியான ‘காட்ஸில்லா vs காங்’ டிரெய்லர் !

ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களின் ஆக்‌ஷன் கதைகளுக்கு நடுவே, மான்ஸ்டர்வெர்ஸ் பட வரிசைகளுக்கும் உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மான்ஸ்டர்வெர்ஸ் எனும் சீரிஸில் தொடர்ச்சியாகப் படங்களைத் தயாரித்துவரும் நிறுவனம் லெஜண்ட்ரி. இதில் முதல் படமாக காட்ஸில்லா கடந்த 2014ல் வெளியானது. அதன்பிறகு, கிங்காங் மான்ஸ்டரை மையமாகக் கொண்டு 2017ல் 'காங்: தி ஸ்கல் ஐலேண்ட்' படமும், அதன்பிறகு, 2019ல் 'காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்' எனும் படங்களும் வெளியானது.

இந்த படவரிசையில் அடுத்த ரிலீஸ் ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’. இப்படத்தை ஆடம் விங்கார்ட் இயக்கியிருக்கிறார். லெஜண்ட்ரி நிறுவனத்துடன் இணைந்து வார்னர் ப்ரதர்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தை 200 மில்லியன் டாலருக்கு நெட்ஃபிளிக்ஸில் வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியானது. பிரம்மாண்டமான ஆக்‌ஷன் திரைப்படத்தை திரையரங்கில் மட்டுமே பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் இந்த ஓடிடி வெளியீடு உறுதியாகாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், திரையரங்கில் படம் வெளியாக இருப்பது உறுதியாகியிருக்கிறது.

உலகையே அழிக்க நினைக்கும் மான்ஸ்டர் காட்ஸில்லா. மனிதர்களுடன் இணைந்து உலகை காக்க போராடும் காங். இந்த உலகைக் காக்க அதிக பலம்வாய்ந்த காட்ஸில்லாவை காங் அழித்ததா என்பதே ஒன்லைன். அதற்குள் செண்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருக்கும் படமே காட்ஸில்லா vs காங். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரியளவில் வைரலாகிவருகிறது. ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் டிரெய்லர்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அமெரிக்காவில் HBO மேக்ஸ் மற்றும் திரையரங்கம் என இரண்டிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.

‘காட்ஸில்லா vs காங்’ டிரெய்லர் வீடியோ

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

திங்கள் 25 ஜன 2021