மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

பஞ்சாப் டூ டெல்லி: ரிவர்சில் டிராக்டரை இயக்கிய விவசாயி!

பஞ்சாப் டூ டெல்லி: ரிவர்சில் டிராக்டரை இயக்கிய விவசாயி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த இரு மாதங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

நாளை சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் டெல்லி சென்று 100கி.மீ பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் டிராக்டர்களுடன் உத்தரப் பிரதேசம் - டெல்லி எல்லையில் உள்ள காஜிபூருக்கு விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மகாராஷ்டிரா நாசிக் நகரில் இருந்து மும்பை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அவர்கள் மும்பைக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி விவசாயி ஒருவர் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி டிராக்டரை பின்னோக்கி இயக்கியுள்ளார். பஞ்சாபின் பர்னாலாவிலிருந்து டெல்லியின் சிங்கு எல்லை வரை டிராக்டரை பின்னோக்கி இயக்கி வந்துள்ளார். சுமார் 350 கிமீ தூரத்தை 5 நாட்களில் கடந்து வந்துள்ளார். தனது உடல் மற்றும் கழுத்து வலியையும் பொருட்படுத்தாமல், வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இவ்வாறு இயக்கியுள்ளார்.

குர்ச்சரன் சிங் என்ற அந்த விவசாயி கூறுகையில், “டிராக்டரை பின்னோக்கி இயக்கும் போது நான் மற்ற வாகன ஓட்டிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டீசலுக்கு அதிக செலவிட வேண்டியிருந்தது. கிளட்ச் பிளேட் மற்றும் பிரேக்குகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. டிசம்பர் 28 அன்று பயணத்தைத் தொடங்கி ஜனவரி 1 ஆம் தேதி பேரணி நடக்கும் இடத்துக்கு வந்தடைந்தேன். பின்னோக்கி வாகனத்தை இயக்கியதால் எனக்கு சில நாட்கள் கழுத்து மற்றும் உடல் வலி இருந்தது. இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியே இவ்வாறு டிராக்டரை இயக்கினேன்” என்று தெரிவித்தார்.

நாளை டிராக்டர் பேரணி நடக்கவுள்ள நிலையில், குர்ச்சரன் சிங் பின்னோக்கி டிராக்டரை இயக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-பிரியா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 25 ஜன 2021