மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

தமிழகத் தேர்தல் எப்போது? பிப்.20, 21இல் தேர்தல் ஆணையம் முடிவு!

தமிழகத் தேர்தல் எப்போது? பிப்.20, 21இல் தேர்தல் ஆணையம் முடிவு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20ஆம் தேதி, 21ஆம் தேதி தேர்தல் ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை எப்போது நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தலின்போது மத்திய பாதுகாப்புப் படையினரின் தேவை குறித்து மத்திய அரசுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

ஆனால், இம்முறை தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியானது. எனவே பொதுத்தேர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. இந்தச் சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைத்தல், அதற்கான இடங்களைத் தேர்வு செய்தல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை மும்முரமாகச் செய்து வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்தும் ஆலோசனையின் அடிப்படையில் பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் மே 5ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 25 ஜன 2021