மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

குடியரசு தினம்: முதன்முறையாக விமானத்தில் பறந்த நீலகிரி பழங்குடி தம்பதி!

குடியரசு தினம்: முதன்முறையாக விமானத்தில் பறந்த நீலகிரி பழங்குடி தம்பதி!

டெல்லியில் நாளை (ஜனவரி 26) நடக்க இருக்கும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பழங்குடியினர் சார்பாக நீலகிரியைச் சேர்ந்த கயமதாஸ் - புஷ்பஜா தம்பதி பங்கேற்கின்றனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகிலுள்ள அத்திச்சால் எனும் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கயமதாஸ் (39), புஷ்பஜா (27) தம்பதி. பனியர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்தத் தம்பதி, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றனர். கூலி வேலை செய்துவரும் கயமதாஸ், அஞ்சல் வழியாக இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று வருகிறார். வனவாசி சேவா கேந்திரத்தின் முழுநேர ஊழியராகப் பணியாற்றியவர்.

இந்த நிலையில் நாளை (26ஆம் தேதி) டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் சார்பாகப் பங்கேற்க, இந்தத் தம்பதி தேர்வாகியுள்ளனர். பந்தலூரில் இருந்து சென்னை வந்த இவர்கள், சென்னையில் உள்ள பழங்குடியின இயக்குநர் அலுவலக உதவியுடன் விமானத்தில் டெல்லி சென்றனர்.

இதுகுறித்துப் பேசிய கயமதாஸ், "சில முறை டிரெயின்ல போயிருக்கோம். ஆனா, முதன்முறையா ஏரோபிளேன்ல இப்போதான் போகப் போறோம். குடியரசு தின விழா நிகழ்ச்சியில கலந்துக்கவும் ஜனாதிபதியைச் சந்திக்கவும் ஏற்பாடு செஞ்சிருக்கிறதா சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த அழைப்பு, எங்க சமுதாயத்துக்கு சந்தோஷமும் பெருமையும் தந்திருக்கு" என்றார்.

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

திங்கள் 25 ஜன 2021