மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

இன்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான நவம்பர் / டிசம்பர் மாத இறுதி செமஸ்டர் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இந்தத் தேர்வு எவ்வாறு நடைபெறும், மாணவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதில் இறுதி செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறும். இதற்காக மாதிரி தேர்வு ஜனவரி 29 மற்றும் 30 தேதிகளில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 18ஆம் தேதி முதல் 2ஆம் தேதி வரை அரியர் மாணவர்களுக்கும், தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தேர்வு ஆன்லைன் மூலம் ஒரு மணி நேரம் நடத்தப்படும். 30 ஒரு மதிப்பெண் கேள்விகளும், 15 இரண்டு மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும்.மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தி அதை 100 மதிப்பெண்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மாணவர்கள் லேப்டாப், செல்போன் கம்ப்யூட்டர் வாயிலாக ஆன்லைன் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு மாணவர்கள் இணைப்பில் இருக்க வேண்டும். ஏதாவது கோளாறு காரணமாக தடை ஏற்பட்டால் மூன்று நிமிடத்திற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிக்கப்படுவார்கள். எனவே எந்தவிதமான முறைகேடுகளில் ஈடுபட்டாலும் கண்டுபிடிக்கப்படுவார்கள். தேர்வு எழுதும்போது வேறு இணையதளம் புத்தகம் பயன்படுத்த அனுமதி இல்லை. மற்ற நபர்களிடம் தொடர்புகொண்டு பதில் பெறக் கூடாது. தேவைப்பட்டால் ஏதாவது எழுதி பார்க்க ஏ4 தாளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது

மேலும் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு https://aucoe.annauniv.edu/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

திங்கள் 25 ஜன 2021