மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

முதல்வன் பட பாணியில்... ஒருநாள் முதல்வரான மாணவி!

முதல்வன் பட பாணியில்... ஒருநாள் முதல்வரான மாணவி!

தமிழில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவான படம் முதல்வன். நிருபராக இருக்கும் நடிகர் அர்ஜூன், முதல்வராக இருக்கும் ரகுவரனைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுப்பார். அப்போது ஒரு நாள் முதல்வர் பதவியில் இருந்து பார், அதன் கஷ்டம் தெரியும் என்று ரகுவரன் கூற, ஒரு நாள் முதல்வராக நடித்திருப்பார் அர்ஜூன். சினிமாவில் மட்டுமே சாத்தியமான இதுபோன்ற நிகழ்வுகள் தற்போது நிஜத்திலும் நடந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டத்தில் சிருஷ்டி கோஸ்வாமி என்ற 19 வயது இளம் பெண் கல்லூரியில் இளங்கலை வேளாண்மை படித்து வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதல்வராகவும் பொறுப்பில் இருக்கிறார். குழந்தைகள் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செய்திருக்கிறார்.

இன்று (ஜனவரி 24) தேசிய பெண் குழந்தைகள் தினம், இதனை முன்னிட்டு சிருஷ்டி கோஸ்வாமியை ஒரு நாள் முதல்வராக பணியில் அமர்த்தி கௌரவப்படுத்தவும், பெண்களை ஊக்கப்படுத்தவும் அம்மாநில அரசு திட்டமிட்டது. அதன்படி, ஒரு நாள் முதல்வர் என்ற சிறப்புப் பதவி சிருஷ்டி கோஸ்வாமிக்கு வழங்கப்பட்டது.

அதற்கு முன்னதாக, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தங்களின் திட்டம் குறித்து தலா 5 நிமிடம் காணொளி காட்சி மூலம் அவருக்கு விளக்கம் அளித்தனர். அம்மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான கெய்சனில் இருந்து மாநிலத்தை நிர்வாகம் செய்த அவர், அரசின் பல்வேறு திட்டங்களை மதிப்பாய்வு செய்தார். அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலாத் துறையின் ஹோம்ஸ்டே திட்டம் உள்ளிட்ட பிற திட்டங்களின் பணிகளையும் மேற்பார்வையிட்டார்.

சிருஷ்டி முதல்வராகச் செயல்பட்ட போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருந்தார். இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்துவதற்காக ஒருநாள் கலெக்டர், ஒருநாள் காவல் ஆணையர் போன்ற பதவிகளில் உட்கார வைக்கப்பட்டு மரியாதை செய்வது வழக்கம். ஆனால் ஒரு நாள் முதல்வர் என்று யாரையும் இதுவரை நியமித்தது இல்லை. முதன்முறையாக இந்தியாவில் ஒரு நாள் முதல்வராகப் பதவி வகித்து ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் இந்த 19 வயது மாணவி.

முதல்வர் பதவி பொறுப்பேற்பதற்கு முன்னதாக பேசிய சிருஷ்டி , இதனை தன்னால் நம்ப முடியவில்லை. என்னால் இயன்றதைச் செய்வேன். மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது பணி இருக்கும்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

ஞாயிறு 24 ஜன 2021