மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா - சண்டே ஸ்பெஷல்: பாத்திரங்களும் பராமரிப்பும்!

கிச்சன் கீர்த்தனா - சண்டே ஸ்பெஷல்: பாத்திரங்களும் பராமரிப்பும்!

குடும்பத்தின் ஆரோக்கியம் தொடங்கும் இடம் சமையலறை. அதைச் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் வைத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். சுத்தமான சமையலறையில் சமைக்கும்போது சுவையும் கூடும். சமையல் வேலை ரசனையானதாக மாறும். அதற்கு பாத்திரங்களைப் பராமரிப்பதும் அவசியம்.

* சமைக்கும் பாத்திரங்களையும், சாப்பிட பயன்படுத்திய பாத்திரங்களையும் உடனுக்குடன் சுத்தமாகக் கழுவி வைத்துவிட்டால் வாடை இருக்காது.

* பயன்படுத்திய பாத்திரங்களை, மலை குவியல் போலாக்கி டென்ஷனாகவும் தேவையில்லை, பார்ப்பதற்கும்

பளிச்சென இருக்கும்.

* வேலையாள் வரவில்லையென்றால், அவர் வரும்வரை அப்படியே போட்டு விடுவது, கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும்.

* நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் வெவ்வேறு மெட்டீரியல்களில் இருக்கும். ஒவ்வொரு பாத்திரத்தையும் தனித்தனியே வெவ்வேறு முறைகளில் கழுவ வேண்டும்.

* எண்ணெய்ப் பிசுக்கு படிந்த, அடிப்பிடித்த பாத்திரங்களை ஸ்க்ரபிங் பிரஷ் கொண்டு தேய்த்தால் எளிதில் சுத்தமாகிவிடும்.

* தீய்ந்து போன பாத்திரங்களைத் தேய்ப்பது கடினம். உடனடியாக முடியாவிட்டாலும் ஒருமுறை நன்றாகத் தேய்த்து, பிறகு வெந்நீரை விட்டு டிடர்ஜென்ட் போட்டு ஸ்க்ரப்பால் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் ஊறவிட வேண்டும். கடைசியில் எலுமிச்சைப்பழச்சாறு கலந்த வெந்நீரில் தேய்த்துக் கழுவிவிடுங்கள். கரி பிடித்த வாசனை போய், தீய்ந்துபோன பாத்திரம், பளிச்சென மாறும்.

* பாத்திரங்களைக் கழுவிச் சுத்தப்படுத்தியதும் நன்றாகக் காயவைத்துவிட வேண்டும். ஈரம்போக கவிழ்த்து வைத்தால் எளிதில் உலர்ந்துவிடும். அல்லது சுத்தமான துணியால் துடைத்து, வெயில்படும்படி வைக்க வேண்டும். இது பாத்திரங்களைச் சுத்திகரித்ததற்கு (ஸ்டெரிலைஸ்) ஈடாகும்.

* பாத்திரங்களைக் கழுவும்போது எஞ்சியிருக்கும் கறிவேப்பிலை, மிளகாய், காய்கறித்தோல் போன்றவற்றை உடனுக்குடன் குப்பைத்தொட்டியில் போட்டுவிட வேண்டும். இதில் சோம்பேறித்தனம் பார்த்தால், அடிக்கடி டிரெயின் (Drain) அடைத்துக் கொள்ளும். பிறகு சரிசெய்யும் வரை அவஸ்தைதான்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 24 ஜன 2021