மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 ஜன 2021

சென்ட்ரல் சுரங்கப் பாதையை விரைந்து முடிக்க வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்!

சென்ட்ரல் சுரங்கப் பாதையை விரைந்து முடிக்க வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்!

சென்ட்ரல் ரயில் நிலைய சுரங்கப் பாதையை விரைந்து முடிக்க தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை மாநகராட்சி ஆகியவை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 400 கோடி ரூபாய் மதிப்பில் சென்ட்ரல் சதுக்கம் என்ற பெயரில் சுரங்க நடைபாதை, பேருந்து நிலையம், மூன்றடுக்கு சுரங்க வாகன நிறுத்தம் ஆகியவற்றை கட்டுவதற்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் சுரங்க நடைபாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுவதாகவும், எனவே இந்த பணிகளை 15 நாட்களில் முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய் பிரான்சிஸ் லயோலா பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "சுரங்க நடைபாதை அமைப்பதற்காக 2018ஆம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இதற்காக பூந்தமல்லி சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அதன் மீது இரும்பு தகடுகளால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

கடந்த அக்டோபர் 20ஆம் தேதி துறைமுகத்திலிருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, அங்கு தோண்டப்பட்டு இருந்த 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜப்பான் போன்ற நாடுகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இது போன்ற சுரங்க நடைபாதைகள் ஒரு வாரத்தில் அமைக்கப்படுகின்றன. எனவே இந்த தற்காலிக பாலத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, "இம்மனு தொடர்பாக தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 23 ஜன 2021