மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 ஜன 2021

அடுத்த சுற்று: அரசியல்வாதிகளுக்குத் தடுப்பூசி!

அடுத்த சுற்று: அரசியல்வாதிகளுக்குத் தடுப்பூசி!

"கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, நானும் கொரோனா தடுப்பூசியை நிச்சயம் போட்டுக் கொள்வேன்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த சுற்றில் அரசியல்வாதிகள், மத்திய மந்திரிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் தடுப்பூசி போடும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் கடந்த 16ஆம் தேதி தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் ஒரு கோடி டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டு கோடி முன்களப் பணியாளர்களான போலீஸார், ராணுவத்தினர், சுத்திகரிப்பு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.

அடுத்த சுற்றில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அதற்குக் குறைந்த வயதில் இணை நோயுடன் இருப்போருக்கும் தடுப்பூசி போடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் பெரும்பான்மையோர் வருகின்றனர்.

எனவே, இவர்களுக்கு அடுத்த சுற்றில் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதே போன்று மாநில கவர்னர்கள், முதலமைச்சர்கள், அரசியல்கட்சி தலைவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் அடுத்த சுற்றில் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் உயர்மட்ட அரசியல்வாதிகளுக்குத் தடுப்பூசி போடுவதற்குக் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி, தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் தொடங்குவதற்கு முன்பாக மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியபோது, அரசியல்வாதிகள் யாரும் தடுப்பூசி போடுவதற்கு வரிசையில் இருந்து முந்த தேவையில்லை, முதல் சுற்றில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன் களப் பணியாளர்களுக்கும்தான் தடுப்பூசி போடப்படுகிறது எனக் கூறியது நினைவுகூரத்தக்கது.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 22 ஜன 2021