மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 ஜன 2021

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் யார், யார்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் யார், யார்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறுபவர்கள் யார், யார் என்று விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் (பிப்.5-9, பிப்.13-17), கடைசி இரு டெஸ்ட் போட்டிகள் ஆமதாபாத்திலும் நடக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணிக்குத் திரும்புகிறார்கள். ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், மார்க்வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

இந்திய அணியின் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விருத்திமான் சஹா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் (உடல் தகுதி அடிப்படையில்), ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல்.

இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கும் முதல் டெஸ்டில் ரசிகர்கள் யாருக்கும் அனுமதியில்லை என்றும் தெரிகிறது.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வெள்ளி 22 ஜன 2021