மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஜன 2021

ரிலாக்ஸ் டைம்: டொமேட்டோ ஆம்லெட்

ரிலாக்ஸ் டைம்: டொமேட்டோ ஆம்லெட்

‘மணலைக்கூட கயிறா திரிச்சுடலாம் போல இருக்கு... ஆனா, வீட்டில் வலம்வரும் குழந்தைங்களை நேரத்துக்கு சாப்பிட வைக்கிற கலை புரிபட மாட்டேங்குதே!’ என்று ஆதங்கப்படும் இல்லத்தரசிகள் ஏராளம். அவர்களுக்கு உதவும் இந்தடொமெட்டா ஆம்லெட். ரிலாக்ஸ் டைமில் இதைச் செய்துகொடுத்து குழந்தைகளைக் குஷிப்படுத்தலாம்.

எப்படிச் செய்வது?

கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு தலா அரை கப், கோதுமை மாவு இரண்டு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி தலா இரண்டு (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, மிளகுத்தூள், சீரகத்தூள் தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், சமையல் சோடா சிறிதளவு... இவை அனைத்தையும் நன்கு கலக்கவும். அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் நன்கு கரைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி, மாவை சின்னச் சின்ன ஆம்லெட்டுகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

சிறப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 21 ஜன 2021