மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு கோஃப்தா கிரேவி

கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு கோஃப்தா கிரேவி

மொபைல் ஆப் வழியாக உணவு ஆர்டர் செய்யும் கலாச்சாரம் இப்போதும் தொடர்ந்து வருகிறது. பாஸ்ட் புட், ஜங்க் புட் போன்றவற்றை வயிற்றில் திணிக்கும் பழக்கமும் தொடர்கிறது. மறுபக்கம், மதிய உணவுக்கு சின்ன கேரியரில் ஏதோ ஒரு குழம்பு சிறிதளவு, கொஞ்சம் சாதம், பொரியல் சிறிதளவு என எடுத்துச் செல்வதுதான் நம்மில் பலரின் வழக்கமாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு சப்பாத்தி, ஃப்ரைடு ரைஸுடன் தொட்டுக்கொள்ள இந்த உருளைக்கிழங்கு கோஃப்தா கிரேவி உதவும்.

என்ன தேவை?

உருளைக்கிழங்கு (மீடியம் சைஸ்) – 2 (வேகவைக்கவும்)

கடலை மாவு – அரை கப்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

ஓமம் – ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்

மல்லித்தழை – அரை கட்டு (நறுக்கவும்)

துருவிய இஞ்சி – சிறிதளவு

மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு

கிரேவிக்கு

தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்)

மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு

தாளிக்க

வெண்ணெய் – 3 டீஸ்பூன்

பட்டை – சிறு துண்டு

கிராம்பு, ஏலக்காய் – தலா 2

சிறிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)

பொரிக்க

எண்ணெய் – 200 கிராம்

மேலே தூவ

மல்லித்தழை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

துருவிய உருளைக்கிழங்குடன் மற்ற பொருள்களைச் சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசைந்து, சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் சிவக்க பொரித்தெடுக்கவும்.

கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து தக்காளி கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

வியாழன் 21 ஜன 2021