மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

அமைச்சர் காமராஜுக்கு எக்மோ சிகிச்சை!

அமைச்சர் காமராஜுக்கு எக்மோ சிகிச்சை!

தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவருக்கு எக்மோ கருவி மூலம் நேற்று இரவு முதல் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர் மாவட்ட அமைச்சரான காமராஜ், இம்மாத ஆரம்பத்தில் மன்னார்குடியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை செல்லும்போது அவருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஜனவரி 5ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் கொரோனா பாசிட்டிவ் என்று தகவல் வெளியானது. பின் கொரோனா இல்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் தொடர் சிகிச்சையில் அங்கேயே இருந்த அமைச்சர் பொங்கலுக்கு முன்னால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் அமைச்சருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், மீண்டும் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஜனவரி 19ஆம் தேதி காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று இரவு திடீரென்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு மிகச் சில நிமிடங்களில் அமைச்சர் காமராஜை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து அரும்பாக்கம் பகுதியில் இருக்கும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு எம்.ஜி.எம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் காமராஜ்.

நேற்று இரவு முதல்வரும், துணை முதல்வரும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்குச் சென்று அமைச்சர் காமராஜின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

எக்மோ கருவி மூலமே இப்போது காமராஜுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருப்பதால் அதிமுகவினர் பதற்றமாக இருக்கிறார்கள்.

-வேந்தன்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

புதன் 20 ஜன 2021