மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: கேரட் பொட்டுக்கடலை கோஃப்தா கிரேவி!

கிச்சன் கீர்த்தனா: கேரட் பொட்டுக்கடலை கோஃப்தா கிரேவி!

சப்பாத்தி, பரோட்டா, வெஜிடபிள் ரைஸ் போன்றவற்றுக்குப் பொருத்தமான சைடிஷ் இருந்தால்தான் அதன் சுவை மேலும் அதிகரிக்கும். அதற்கு இந்த கேரட் பொட்டுக்கடலை கோஃப்தா கிரேவி உதவும். எப்போதும் ஹோட்டல்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் இப்படிப்பட்ட கிரேவி உணவு வகைகளை உங்கள் வீட்டிலேயே செய்து மகிழலாம்.

என்ன தேவை?

துருவிய கேரட் – அரை கப்

பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்)

இஞ்சித் துருவல் – கால் டீஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு – அரை கப்

அரிசி மாவு – அரை கப்

சமையல் சோடா – ஒரு சிட்டிகை

நெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன்

கிரேவிக்கு

தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்)

மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்

உப்பு – சிறிதளவு

தாளிக்க

வெண்ணெய் – 3 டீஸ்பூன்

பட்டை – சிறிய துண்டு

கிராம்பு, ஏலக்காய் – தலா 2

சீரகம் – அரை டீஸ்பூன்

பூண்டு பல் – 2 (பொடியாக நறுக்கவும்)

சின்ன வெங்காயம் – 2 (நறுக்கவும்)

பொரிக்க

எண்ணெய் 200 மில்லி.

மேலே தூவ

நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

எப்படிச் செய்வது?

துருவிய கேரட் மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து ஒரு டீஸ்பூன் நெய் கலந்து பிசையவும். இதைச் சிறிய எலுமிச்சை அளவு உருட்டி சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.

கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருட்களைத் தாளித்து தக்காளி கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தபின் பொரித்த கோஃப்தாக்களைப் போட்டு 2 - 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 20 ஜன 2021