மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 17 ஜன 2021

பிக்பாஸ் சீசன் 4 :வெற்றியாளர் யார் ?

பிக்பாஸ் சீசன் 4 :வெற்றியாளர் யார் ?

கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸின் நான்காவது சீசன் தற்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இதன் இறுதி நாள் நிகழ்ச்சியானது இன்று நடக்கிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யாரென்ற செய்தி இன்று இரவு தெரிந்துவிடும். அதற்கு முன்பு, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்த சின்ன ரீகேப் பார்த்துவிடலாம்.

கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போன நிகழ்ச்சியானது, கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம்தேதி துவங்கியது. மொத்தமாக 18 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முறைப்படி, கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, 14 நாட்கள் தனிமையில் இருந்து, அதன்பின்னரே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டனர். சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் ஈவிபி கார்டனில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியானது செட் போடப்பட்டு நடந்துவருகிறது.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் இருக்கும். அப்படி, இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா சம்பத், ஆஜித் மற்றும் ஷிவானி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில், பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறியது நடிகை ரேகா. நிகழ்ச்சி துவங்கிய 14வது நாள் வெளியேற்றப்பட்டார் . இறுதியாக, 98வது நாளில் ஷிவானி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் சீசன் 4-ன் இறுதிக்கட்டப் போட்டியாளராக ரியோ ராஜ், ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், சோம் ஷேகர் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இந்த ஆறு பேரில் ‘டிக்கெட் டூ ஃபினாலே’ என்கிற டாஸ்கில் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வானார் சோம் ஷேகர். அதுபோல, பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐந்து லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறும் வாய்ப்பை தேர்ந்தெடுத்தார் கேப்ரியல்லா. அதன்படி, பிக்பாஸ் வீட்டிலிருந்து 102வது நாள் வெளியேறினார்.

ஆக, இப்போதைக்கு ஐந்து போட்டியாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. முந்தைய சீன்கள் போல் இல்லை என்ற குறை இருந்தாலும், ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியின் போதும் குறைவில்லாமல் விவாதங்களை இணையத்தில் கிளப்பிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 4.

முதல் நாளிலிருந்து நடிகர் ஆரிக்கு ரசிகர்கள் ஆதரவு ஏகபோகமாக இருக்கிறது. அதனால், அவர் வெல்லுவதற்கு வாய்ப்பு அதிகம் என்றே சொல்லப்படுகிறது. அதோடு, பாலாஜி , ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியனுக்கும் ஆதரவு கருத்துகள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. கடந்த சீசனில் எதிர்பாராத வகையில் முகேன் தேர்வானதுபோல, சோம் தேர்வாகவும் வாய்ப்பிருக்கிறது. மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கப் போகிறது என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், இந்த முறை இரண்டாவது நாளிலிருந்தே பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்தது. குறிப்பாக, ஆரி & பாலாஜி இருவருக்குமே பெரிய மோதல்கள் வெடித்தன. ஒரு கட்டத்தில் ஆரிக்கு எதிராக ஒட்டுமொத்த பிக்பாஸ் ஹவுஸ் மேட்களும் போர்கொடி தூக்கினர். ஆனால், மக்கள் ஆதரவுடன் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார் ஆரி. அதோடு, நான்கு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் சுவாரஸ்யமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது, ஒவ்வொரு வாரமும் அவர் விரும்பும் புத்தகத்தை பரிந்துரை செய்வதும் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது. அதோடு, அவரின் அரசியல் பிரச்சாரத்துக்கான மேடையாகவும் பிக்பாஸை பயன்படுத்திக் கொண்டார்.

சமீபத்தில் சென்னை பெரும் மழையைக் கண்டது. அந்த நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால், ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் தற்காலிகமாக அருகில் இருந்த நட்சத்திர விடுதிக்கு மாற்றியது. அதுபோல, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் வரை அனைத்துப் பண்டிகைகளையும் வீட்டுக்குள் கொண்டாடினார்கள்.

2017ல் நடந்த முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னராக தேர்வானார். இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ் ஆகியோர் வெற்றிபெற்றார்கள்.. மூன்றாவது சீசனில் 20 கோடி வாக்குகள் வந்ததாக கமல் தெரிவித்திருந்தார். இந்த நான்காவது சீசனில் எத்தனை வாக்குகள்? யார் வெற்றியாளர் என்பது இன்று தெரிந்துவிடும்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 17 ஜன 2021