மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 17 ஜன 2021

நான்காவது டெஸ்ட்: இந்தியா 336 - சுந்தர் 62

நான்காவது டெஸ்ட்: இந்தியா 336 - சுந்தர் 62

பிரிஸ்பேனில் நடந்து வரும் கடைசி டெஸ்டில் மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்டில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 15) தொடங்கியது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் இந்திய அணி இன்று (ஜனவரி 17) மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடியது. தற்போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்டில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியைவிட 54 ரன்கள் அதிகம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

ஞாயிறு 17 ஜன 2021