மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 17 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - திடீர் விருந்தினர்களும் இன்ஸ்டன்ட் ரெசிப்பிகளும்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - திடீர் விருந்தினர்களும் இன்ஸ்டன்ட் ரெசிப்பிகளும்!

2021 புத்தாண்டுக்குப் பிறகு பண்டிகைகள், சுப நிகழ்ச்சிகளின் அழைப்புக்காக வீட்டுக்கு வரும் திடீர் விருந்தினர்களுக்குச் சட்டென ஏதேனும் செய்துகொடுக்க முடியாமல் தவிக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த இன்ஸ்டன்ட் ரெசிப்பிகள் உதவும்.

* எல்லோர் வீட்டிலும் பிரெட் இருக்கும். அத்துடன் சீஸ் சேர்த்து இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவிக்கொள்ளவும். தோசைக்கல்லில் வாட்டி, பிரெட் டோஸ்ட் தயாரிக்கலாம். இதில் நறுக்கி வைத்த தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், மிளகாய் ஆகியவற்றை வதக்கி சேர்த்து சாண்ட்விச் தயாரிக்கலாம்.

* பிரெட்டை சின்ன துண்டுளாக கட் செய்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, நன்கு புரட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு இவற்றைப் பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு வதக்கி இதனுடன் பிரெட்டை சேர்த்துக் கிளறி எடுத்தால், பிரெட் உப்புமா ரெடி. தண்ணீர் விடக் கூடாது. தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

* தோசை மாவு இருந்தால் ஒரு பெரிய தோசைக்கல்லில் ஐந்து அல்லது ஆறு சிறிய தோசைகளாக ஊற்றிக் கொள்ளவும். அவற்றின்மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியைத் தூவவும். பிறகு தோசையின் மேல் நெய் அல்லது வெண்ணெய், இட்லிப்பொடி அல்லது மசாலாப்பொடி தூவவும். சிறிது நெய் விட்டு, தோசையைத் திருப்பிவிட்டு லேசாக வெந்தவுடன் எடுத்துக் கொடுக்கலாம். தோசையிலேயே இட்லிப்பொடி, மசாலாப்பொடி இருப்பதால் தனியாக சட்னி தேவைப்படாது.

* தோசை மாவுடன் சிறிது கடலைமாவு சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, சிறிது சோம்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் ஒரு ஸ்பூனில் மாவை எடுத்து சிறிது சிறிதாகக் காய்ந்த எண்ணெயில்விட்டுப் பொரித்தெடுத்தால் சுவையான இன்ஸ்டன்ட் பக்கோடா ரெடி.

* வீட்டிலுள்ள கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி போன்றவற்றைக் காம்புகள் நீக்கிக் கழுவி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் லேசாக எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து அதனுடன் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஏதேனும் ஒன்றைச் சேர்த்து வதக்கி, சிறிதளவு புளி, சிறிய துண்டு தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் ரெடி. இது அனைத்து டிபன் வகைக்கும் ஏற்றதாக அமையும்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 17 ஜன 2021