மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

’முதல்வன் ஓபிஎஸ்’ : சேனலில் தீவிரம் காட்டும் பன்னீர்

’முதல்வன் ஓபிஎஸ்’ : சேனலில் தீவிரம் காட்டும் பன்னீர்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓபிஎஸ் இமேஜை அதிகரிக்கும் வகையில் தொடர்ச்சியாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘முதல்வன் ஓபிஎஸ்’ என்ற யூடியூப் சேனல் தற்போது புரோமோட் செய்யப்பட்டு வருகிறது.

முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடங்கி, இபிஎஸ் தனியாகத் தேர்தல் பிரச்சாரம்  ஆரம்பித்தது வரை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்புக்கு இடையே தொடர்ந்து  பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், அதனை அதிமுக அமைச்சர்கள் மறுக்கின்றனர். இருவரும் அண்ணன் தம்பி போல் செயல்படுவதாகக் கூறுகின்றனர்.

அனைத்து செய்தித்தாள்களிலும் அரசு தரப்பிலிருந்து விளம்பரம் கொடுக்கப்பட்டு வருகிறது.  இதில், ஓபிஎஸ் படம் சமீபகாலமாகத் தவிர்க்கப்பட்டு வருவதைப் பார்த்து, அதிமுகவினரிடம் வெளிப்படையாகவே  கேட்டிருக்கிறார் ஓபிஎஸ். அதுபோன்று  ஓபிஎஸ் படம் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய மகனும், மக்களைவை எம்.பியுமான ரவீந்திரநாத்திடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஓபிஎஸ். இதையடுத்து, தமிழகம் முழுவதும் செய்தித் தாள்களில் முதல் இரண்டு பக்கங்களுக்கு, பெரிய செலவில் தன்னுடைய சாதனை குறித்து ஓபிஎஸ் விளம்பரம் செய்து வருகிறார்.

‘ஓபிஎஸ் நிர்வாகத் திறன், அவருடைய நிதி நிர்வாகத் திறன், ஜெயலலிதாவால் அடையாளம்’ காணப்பட்டவர் என அவர் புகழை பரப்பும்  வகையில்  விளம்பரங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு தனி ஆவர்த்தனம் செய்து வரும் நிலையில், தற்போது முதல்வன் ஓபிஎஸ் என்ற யூடியூப் சேனலை புரோமோட் செய்து வருகிறார்.

2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சேனலை  முழு கவனமாக ஓபிஎஸ் புரோமோட் செய்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதில், வீட்டிலிருந்து கிளம்புவது முதல் பொதுக்குழு, பிரச்சாரம் என நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வரை ஓபிஎஸின் செயல்பாடுகள் ஒளிபரப்பப்படுகின்றன.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 15 ஜன 2021