மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

ஈஸ்வரன் இயக்குநர் சுசீந்திரன் தாயார் காலமானார்!

ஈஸ்வரன் இயக்குநர் சுசீந்திரன் தாயார் காலமானார்!

சிம்பு நடிப்பில் நேற்று வெளியான ஈஸ்வரன் படத்தின் இயக்குநரான சுசீந்திரனின் தாயார் திடீரென இன்று காலை காலமானார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா, பாயும்புலி உள்ளிட்ட பல சமூகம் சார்ந்தப் படங்களைக் கொடுத்தவர் சுசீந்திரன். குறிப்பாக, அவரின் தந்தை கபடி வீரர். அவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டே வெண்ணிலா கபடி குழு படத்தை 2009ல் இயக்கினார். இவரின் இயக்கத்தில் சிம்பு, நித்தி அகர்வால், பாரதிராஜா நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்கில் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் ரிலீஸான மகிழ்ச்சியில் இருந்த சுசீந்திரனுக்கு பேரதிர்ச்சியான சம்பவமாகியிருக்கிறது அவரின் தயாரின் மரணம். சுசீந்திரனின் தயாரான 62 வயதான ஜெயலட்சுமி, இன்று அதிகாலை ஏற்பட்ட ஹார்ட் அட்டாக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மரணம் திரைத்துறையில் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அம்மையாரின் இறுதிச் சடங்கானது அவரின் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் இன்று மாலை நடைபெற இருக்கிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 15 ஜன 2021