மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

திருவள்ளுவர் குறித்து தமிழில் ட்வீட் போட்ட பிரதமர்!

திருவள்ளுவர் குறித்து தமிழில் ட்வீட் போட்ட பிரதமர்!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறள் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் அன்று தெய்வ புலவர் திருவள்ளுவரின் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை  உலக முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் திருக்குறளைப் பதிவிட்டு அதற்கு விளக்கமும் கொடுத்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவரை நினைவு கூர்ந்து  தமிழில் பதிவு செய்துள்ளார்.  அவர் வெளியிட்ட பதிவில்,  “போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.

அவரது லட்சியங்கள்  தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று  தெரிவித்துள்ளார்.

பிரதமர் தமிழில்  ட்வீட் செய்ததற்குத் தமிழகத்திலிருந்து வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து,  “இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்னும் பிரதமர் மோடியின் சுட்டுரையை வரவேற்கிறோம் என்றும் தேசிய நூலாகத் திருக்குறளை அறிவிக்க இதுவே தக்க தருணம்" என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 15 ஜன 2021