மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

நாளை தடுப்பூசி விநியோகம் தொடக்கம்: தயார் நிலையில் இந்தியா!

நாளை தடுப்பூசி விநியோகம் தொடக்கம்: தயார் நிலையில் இந்தியா!

நாடு முழுவதும் நாளை, 16ஆம் தேதி நடத்தப்படும் கொரோனா தடுப்பூசி முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக மாநில சுகாதாரத் துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடு முழுவதும் மூன்று கட்டங்களாகத் தடுப்பூசி ஒத்திகை நடத்தி பொது மக்கள் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் நேற்று (ஜனவரி 14) வெளியிட்ட அறிவிப்பில், “தேசிய அளவிலான கொரோனா, தடுப்பூசி திட்டத்தை நாளை காலை 10.30 மணிக்குக் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால், இது உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமாக இருக்கும். இந்தத் தொடக்கத்தின்போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3006 இடங்கள் காணொலிக் காட்சி மூலம் இணைக்கப்படும். தொடக்க நாளில், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 பயனாளிகளுக்குத் தடுப்பூசி போடப்படும்.

முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தத் தடுப்பூசி திட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை (ஐசிடிஎஸ்) ஊழியர்கள் உட்பட அரசு மற்றும் தனியார் துறை சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்.

கோ-வின் என்ற ஆன்லைன் டிஜிட்டல் தளம் தடுப்பூசி இருப்புகள், சேமிப்பு வெப்பநிலை மற்றும் கோவிட்-19 தடுப்பூசி பயனாளிகளின் தனிப்பட்ட கண்காணிப்பு உள்ளிட்ட நிகழ்நேர தகவல்களை அளிக்கும். தடுப்பூசி போடப்படும் நேரத்தில், இந்த டிஜிட்டல் தளம், திட்ட மேலாளர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவும்.

கொரோனா தொற்று, தடுப்பூசி அறிமுகம் மற்றும் கோ-வின் மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கப் பிரத்யேக 24 மணி நேர உதவி மையம் - 1075 ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போதிய அளவில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 15 ஜன 2021