மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி தேங்காய்ப்பால் கீர்!

கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி தேங்காய்ப்பால் கீர்!

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கல் திருநாள் விருந்தில் பாயசம் நிச்சயம் இடம்பெறும். இன்று இந்த ஜவ்வரிசி தேங்காய்ப்பால் கீர் செய்து அசத்துங்கள். ஜவ்வரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட், குறைந்த அளவில் கொழுப்பு ஆகியவை உள்ளன. 100 கிராம் ஜவ்வரிசியில் 351 கிலோ கலோரிகள் உள்ளன. இதில் 87 கிராம் கார்போ ஹைட்ரேட், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 0.2 கிராம் புரதம் ஆகியவை உள்ளன. இப்படி சத்துகள் நிறைந்த ஜவ்வரிசியுடன் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் இந்த கீர், இன்றைய பொங்கல் திருநாளை மேலும் குதூகலமாக்கும்.

என்ன தேவை?

நைலான் ஜவ்வரிசி - 50 கிராம்

நெய் - 3 டீஸ்பூன்

வெல்லம் - 100 கிராம்

தேங்காய்ப்பால் - ஒரு கப் (முழு தேங்காயைத் துருவி பால் எடுக்கவும்)

முந்திரி, திராட்சை (சேர்த்து) - 20 கிராம்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

குங்குமப்பூ - 3 அல்லது 4 இதழ்கள்

எப்படிச் செய்வது?

கடாயில் நெய்விட்டு முந்திரி - திராட்சையைப் பொரித்தெடுக்கவும். கடாயில் மீதமுள்ள நெய்யில் ஜவ்வரிசியைச் சேர்த்து வறுத்து, ஒரு கப் நீர் சேர்த்து வேகவிடவும். வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, வெந்துகொண்டிருக்கும் ஜவ்வரிசியில் சேர்த்து கொதிக்கவிடவும். தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி இறக்கி, வறுத்த முந்திரி - திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மேலே குங்குமப்பூ சேர்த்துப் பரிமாறவும்.

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வியாழன் 14 ஜன 2021