மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 ஜன 2021

'ஊதியம் வழங்கப்படுவதில்லை’: தவிக்கும் அரசு பொறியாளர்கள்!

'ஊதியம் வழங்கப்படுவதில்லை’: தவிக்கும் அரசு பொறியாளர்கள்!

அரசு துறைகளில் பணியமர்த்தப்பட்ட பொறியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பொதுப்பணித் துறை, நீர்வள ஆதார அமைப்பு, பொதுப்பணித் துறை கட்டுமானப் பிரிவு மற்றும் தொழில் பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணி வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோன்று 2020 ஆம் ஆண்டு பொதுப்பணித் துறை, நீர்வள ஆதார அமைப்பு, பொதுப்பணித் துறை கட்டுமானப் பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் முதல் 10 பேருக்கான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் வழங்கியிருக்கிறார்.

இந்த சூழலில் இந்த துறைகளில் தேர்வான பொறியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அதாவது மொத்தம் 80 பேர் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ள நிலையில், முதல்வர் கையில் பணி ஆணை பெற்ற 10 பேருக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள 70 பேருக்கும் 10 மாதங்களாகியும் ஊதியம் கொடுக்கப்படவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.

ஊதியம் வழங்கப்படாதது குறித்து கேட்டால் கருவூலத்தில் பணம் இல்லை, இவர்களுக்கு ஊதியம் வழங்க நிதி அனுமதி கிடைக்கவில்லை என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 13 ஜன 2021