மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 17 ஜன 2021

ஜன. 25 வரை பொங்கல் பரிசு பெறலாம்: தமிழக அரசு!

ஜன. 25 வரை பொங்கல் பரிசு பெறலாம்: தமிழக அரசு!

பொங்கல் பரிசு, ரொக்கத்தொகையைப் பெற கால அவகாசத்தை 25ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரூ.2,500 ரொக்கத் தொகையுடன், பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறது. காலை 100 பேர், மாலை 100 பேர் என கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்டது. இதுவரை 2.01 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மொத்த அட்டைதாரர்களுடன் ஒப்பிடும்போது 97 சதவிகிதம் பேருக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டதாகவும், விடுபட்ட 6 லட்சம் அட்டைதாரர்களுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கக் கால அவகாசம் வரும் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பில், "பொங்கல் பரிசு மற்றும் தொகையை ஜனவரி 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் யாரும் விடுபட்டுவிடாமல் இருப்பதற்காக 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி

வரை ரேஷன் கடை விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பொங்கல் பரிசையும், தொகையையும் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

செவ்வாய், 12 ஜன 2021

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon