மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த பரிசீலிக்கலாம்: உயர் நீதிமன்றம்!

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த பரிசீலிக்கலாம்: உயர் நீதிமன்றம்!

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

பொங்கல் ரிலீஸுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் தயாராக இருக்கின்றன. இதனிடையே 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கிய அரசாணையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, 100சதவிகித அறிவிப்பைத் தமிழக அரசு ரத்து செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது 100 சதவிகித அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

இதையடுத்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வில், " மறு உத்தரவு வரும் வரை 50 சதவிகித இருக்கை வசதிகளுடன் திரையரங்குகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், "10 சதவிகிதம் 30 சதவிகிதம் 50 சதவிகிதம் என எப்படி இயங்கினாலும் தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான செலவினங்களைக் கையாள வேண்டும் என்பதால் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். டெல்லி நொய்டா உள்ளிட்ட இடங்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், "திரைப்படம் வெளியிடப்படும் முதல் மூன்று நாட்களுக்கு பெரும்பாலான திரையரங்குகளில் 100 சதவிகித டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் அவற்றை 50 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், "ஏற்கனவே 100 சதவிகித இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்ட திரையரங்குகளிலும் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீதி உள்ள 50 சதவிகித இருக்கைகளுக்குப் பதிலாகக் காட்சிகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 50 சதவிகித பார்வையாளர்களை அடுத்த காட்சிகளுக்கு அனுமதிக்கலாம். காட்சிகளை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே இழப்பைச் சரி செய்ய முடியாது. நொய்டா டெல்லி போன்ற மாநிலங்களைப் போல சினிமா கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனத் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை அரசு பரிசீலிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

திங்கள் 11 ஜன 2021