மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

‘காலேஜூ பொண்ணு, ஸ்கூல் போகும் கண்ணு...’ : வைரலாகும் பாலியல் விழிப்புணர்வு பாடல்!

‘காலேஜூ பொண்ணு, ஸ்கூல் போகும் கண்ணு...’ : வைரலாகும் பாலியல் விழிப்புணர்வு பாடல்!

நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையான சட்டங்களை இயற்றினாலும், அவை குறைந்த பாடில்லை. பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பும் பெற்றோர்கள், மீண்டும் அவர்கள் வீடு வரையில் ஒருவித பயத்துடனே இருப்பதாகக் கூறுகின்றனர்.

ஒரு பக்கம் பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், மறுபக்கம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சசிகலா என்ற பெண் காவலர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்களைத் தடுக்கும் வகையில் ‘குட்டிமா’ என்ற தலைப்பில், விழிப்புணர்வு பாடலை எழுதிப் பாடியுள்ளார். ஜெயப்பிரகாஷ் என்ற இசையமைப்பாளர் இதற்கு இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகளில், எந்தெந்த காரணங்களுக்காக பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது, அதை எப்படித் தடுப்பது, பெண்களும், குழந்தைகளும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், குட் டச் பேட் டச், தற்காப்புக் கலைகள், செல்போன் பயன்பாடு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடலை பாடியுள்ளார் சசிகலா.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2017ல் காவல் பணியில் சேர்ந்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாண்டதன் அடிப்படையில் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், காவலர் சசிகலா பாடிய பாடலை பாராட்டி சிடி-யாக வெளியிட்டார். தற்போது, பெண் காவலர் சசிகலாவுக்குப் பொதுமக்கள் தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

திங்கள் 11 ஜன 2021