ரிலாக்ஸ் டைம் : முருங்கைக்கீரை சூப்!


யார் வீட்டில் முருங்கை மரம் நிற்கிறதோ, அவர்கள் குடும்பத்தை நோய் சீக்கிரம் அண்டாது என்று நம் முன்னோர் சொல்வார்கள். ஏனென்றால், முருங்கை என்பது வெறும் மரமல்ல; வீட்டிலேயே இருக்கும் வைத்தியர். இந்த முருங்கைக்கீரை சூப் வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் என்றும் சொல்லலாம்.
எப்படிச் செய்வது?
25 கிராம் பாசிப்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சிறிய துண்டு பட்டை, சிறிதளவு பிரிஞ்சி இலை, சிறிதளவு சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் ஒன்று, தக்காளி இரண்டு, பச்சை மிளகாய் நான்கு, முருங்கைக்கீரை ஒரு கப் சேர்த்து வதக்கவும். இத்துடன் பருப்பைச் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர்விட்டு அரை டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் சோம்புத்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். கீரை வெந்ததும் இறக்கவும்.
சிறப்பு