மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகள் : முழு விவரம்!

பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகள் : முழு விவரம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கும். 2020ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 22,588 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் வரவிருக்கும் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது

ஜனவரி 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என 3 நாட்களுக்கும் மொத்தமாக, சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படும்.

பண்டிகை முடிந்த பின்பு சொந்த ஊர்களிலிருந்து திரும்ப ஏதுவாக வரும் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 15,270 பேருந்துகள் இயக்கப்படும்.

எங்கிருந்து எங்கு

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டைக்கும்,

கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கும்,

தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சைக்கும்.

தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூருக்கும்.

பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரிக்கும்

வழக்கம்போல் கோயம்பேட்டிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை, பெங்களூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவு மையங்கள்

கோயம்பேடு - 10,

தாம்பரம் சானிடோரியம் - 2,

பூவிருந்தவல்லி -1 என 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இணையம்

www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

உதவி மற்றும் புகார் எண்கள்

பேருந்துகளின் இயக்கம் குறித்துத் தெரிந்துகொள்ள : 94450 14450, 94450 14436

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் குறித்த புகாருக்கு 1800 425 6151 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 9 ஜன 2021