மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

பயணிகளுடன் மாயமான போயிங் ரக விமானம்!

பயணிகளுடன் மாயமான போயிங் ரக விமானம்!

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளது. விமானத்தைத் தேடும் பணி நடந்து வருவதாக அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ விஜயா ஏர் என்ற விமான நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த போயிங் ரக விமானம் அதே நாட்டில் உள்ள மேற்கு கேலி மாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி இன்று காலை புறப்பட்டது.

ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சுமார் 4 நிமிடங்களுக்குப் பிறகு, 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் இணைப்பை அந்த விமானம் இழந்ததாக விமானங்களின் பயணத்தைக் கண்காணிக்கும் இணையத் தளமான Flightradar24.com கூறியுள்ளது.

இதில் 6 விமான ஊழியர்கள் உட்பட ஏறத்தாழ 60 பயணிகள் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜகார்த்தாவில் உள்ள சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர் விமானம் தொடர்பை இழந்ததை ஜகார்த்தாவில் உள்ள போக்குவரத்து அமைச்சகம் அலுவலகம் ஏபிசி செய்திக்கு உறுதிப்படுத்தியுள்ளது. அதோடு விமானத்தைத் தேடும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளது. விமானம் குறித்த தகவல்களைப் பெற முயன்றுவருவதாக ஸ்ரீ விஜயா ஏர் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

இந்த விமானம் போயிங் ரகம் என்றாலும், ஏற்கனவே விபத்துகளில் சிக்கி சர்ச்சைக்குள்ளான 737 மேக்ஸ் ரகம் அல்ல என்று கூறப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியா விமானச் சேவை நிறுவனமான லயன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

சனி 9 ஜன 2021