மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

ஹேப்பி நியூஸ்: ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி!

ஹேப்பி நியூஸ்: ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி!

நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்தது.

உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடு முழுவதும் 3 கட்டமாகத் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. நேற்று தமிழகம் வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், அப்பல்லோ ஆகிய மருத்துவமனைகளில் நடைபெற்ற ஒத்திகையை ஆய்வு செய்தார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 9) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் தேதி குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதலில் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கும், அதனைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 50 வயதுக்குட்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 27 கோடி பேருக்கும் செலுத்தப்படும். கோ-வின் என்ற அலைப்பேசி செயலி மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தடுப்பூசி சேமிப்பு, முன் பதிவு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் தெரிந்துகொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இதன்மூலம் தற்போது வரை 79 லட்சம் பேர் பதிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 9 ஜன 2021