மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி!

மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி!

அரசு பொது மருத்துவமனை ஒன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது  ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து 900 கி.மீ.தொலைவில் உள்ள பண்டாரா மாவட்டத்தில் நான்கு மாடியுடன் கூடிய அரசு பொது மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.   இங்குக் குறைப் பிரசவம் மற்றும் ஏதேனும் குறைபாடுடன் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

இங்கு இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 10  பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.  வெளியுலகைக் காணாத இந்த குழந்தைகளில் 3 பேர் தீக்காயத்தாலும், 7  பேர்  மூச்சுத்திணறலாலும் உயிரிழந்துள்ளன.  இவர்கள் ஒரு மாதம் முதல் மூன்று மாதத்துக்குள்ளான குழந்தைகள் என்றும் இவ்விபத்திலிருந்து 7 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

முதற்கட்ட விசாரணையில் விபத்துக்கான காரணம் மின் கசிவாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில், மருத்துவமனை உரிய பராமரிப்பு இன்றி செயல்பட்டதால் தான் விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் எங்கள் பிள்ளைகளை இழந்து தவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கதறுகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்து சம்பவம் குறித்து சுகாதார அமைச்சர் ராஜேஷுடன் பேசிய முதல்வர் உத்தவ் தாக்ரே, விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தி முழு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.  10 பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 9 ஜன 2021