மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

நாட்டையும் மக்களையும் காப்பவர்களுக்கே... உங்கள் வாக்கை உறுதிபடுத்துங்கள்!

நாட்டையும் மக்களையும் காப்பவர்களுக்கே... உங்கள் வாக்கை உறுதிபடுத்துங்கள்!

மரம் - முகநூல் பதிவு

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒக்கி புயல் கஜா புயல் தானே புயல் வர்தா புயல் மற்றும் சுனாமி ஆகியவற்றால் மொத்த தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விவசாயிகள் பல சிரமங்களை சந்தித்துக் கொண்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் புவி வெப்பமயமாதல்; அதனால் ஏற்படும் பருவநிலை மாறுபாடுகளே. இதைப் போக்க வேண்டுமென்றால் ஒரே தீர்வு, மரம் வளர்ப்பது மட்டுமே. அதை தற்போதைய சூழலில் பொது இடங்களில் வளர்ப்பது மிகப்பெரிய சவால் மற்றும் செலவு அதிகமானது.

எனவே தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 85 சதவிகிதத்துக்கும் மேல் விவசாய நிலமாகவும் அதில் 65 சதவிகிதம் மக்கள் ஈடுபடுவதாலும் அவர்கள் மரம் நட்டால் மட்டுமே இது சாத்தியம்.

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கு அரசாங்கங்கள் மானியங்களை அறிவிக்க வேண்டும். புயல் வெள்ளத்தால் ஏற்படும் பல்லாயிரம் கோடி சேதத்தை மரம் நட்டால் மட்டுமே தீர்க்க முடியும்.

மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கும் விவசாயிகளுக்கு மானியம் கொடுத்து உதவுவதன் மூலம் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முடியும்.

தமிழகத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும்

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்

மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கும் விவசாயிகளுக்கு அரசு செய்ய வேண்டியது

1. ஒவ்வொரு வருடமும் ஏற்படும் இயற்கை சீற்றத்தால் மர விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். அவர்களுக்கு எந்த நிவாரணமும் இப்போது இல்லை. எனவே அனைத்து டிம்பர் மரங்களுக்கும் காப்பீடு அளிக்க வேண்டும். காப்பீட்டுத் தொகை பாதியை அரசே செலுத்த வேண்டும்.

2. மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு மரத்திற்கும் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். உதாரணமாக கர்நாடகாவில் ஒரு மரத்திற்கு 125 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறார்கள்.

3..மரம் சார்ந்த விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மரத்தை அடகாகப் பெற்றுக்கொண்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும்

(கேரளாவில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.)

4. விவசாயி என்ன வகையான மரங்களை வளர்த்தாலும் விற்பனைக்கு தடை இருக்கக்கூடாது.

5. அரியவகை மரங்களை அரசுக்கு சொந்தமான வனப்பகுதிகளில் நடவு செய்து அதை பாதுகாக்க வேண்டும்.

6. மர விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் மரங்களை இந்தியா முழுவதும் எடுத்து செல்லவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் எந்த தடையும் இருக்கக் கூடாது.

7. விவசாயி தன்னுடைய நிலத்தில் வளர்த்த மரங்களைதான் எடுத்து செல்கிறார் என்பதற்கான அடங்கல் பதிவேட்டை மட்டும் பெற்றுக்கொண்டு மரங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

8. விவசாயி தான் வளர்க்கும் செம்மரம், சந்தனம் போன்ற உயர் மதிப்புள்ள மரங்களை யாருக்கு வேண்டுமென்றாலும் விற்கும் உரிமை வேண்டும்.

உதாரணமாக சந்தன மரத்தை கர்நாடகத்தில் யாருக்கு வேண்டுமென்றாலும் விற்க முடியும். ஆனால், தமிழகத்தில் அரசிடம் மட்டுமே விற்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

9. அரசாங்கம் மற்ற விவசாய விளைபொருட்களுக்கு உள்ளதுபோல் மரங்களுக்கும் மர மேம்பாட்டு வாரியம் அமைத்து அனைத்து டிம்பர் மரங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

10. UPVCயைத் தடை செய்து சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 8 ஜன 2021