மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி ரத்து!

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி ரத்து!

திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கியதைத் தமிழக அரசு இன்று (ஜனவரி 8) மாலை ரத்து செய்தது.

திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என மத்திய அரசும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் அறிவுறுத்தியிருந்த நிலையில், உத்தரவைத் தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 4.1.2021 அன்று, தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், ரயில், பஸ் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், திரைப்படப் படப்பிடிப்பு ஆகியவற்றுக்குப் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், திரையரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி திரையரங்குகள் 100 % இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதித்திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்து, 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மத்திய அரசின் அறிவுரையைக் கருத்தில் கொண்டும், இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்திச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ளத் திரையரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

வெள்ளி 8 ஜன 2021