மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

ரேஷன் கடைகளுக்கு முன்பு அதிமுக பேனர்: அகற்ற உத்தரவு!

ரேஷன் கடைகளுக்கு முன்பு அதிமுக பேனர்: அகற்ற உத்தரவு!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நிலையில் ரேஷன் கடைகளின் முன்பு அதிமுக பேனர்கள் வைக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் பரிசுத் தொகையைத் தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் படங்கள் அச்சிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ரேஷன் கடைகளுக்கு வெளியே ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைப்பதாக திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, அரசு சின்னம் பதித்து 39 ஆயிரம் ரேஷன் கடைகளின் முன்பு அதிமுகவினர் அனுமதியின்றி பேனர்கள் வைத்திருப்பதாகவும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் அனுமதியின்றி பேனர்கள் வைக்க மாட்டோம் என்று ஆளும் கட்சி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்ததையும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள் ரேஷன் கடை அருகில் விளம்பரம் பேனர் இருக்கக்கூடாது பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுபோன்று ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க கூடாது என்றும் பொது இடங்களில் அனுமதி இன்றி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அதே சமயம் பொங்கல் பரிசு தொகுப்பு பையில் முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர் படங்கள் இடம்பெற நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 8 ஜன 2021