மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

தனுஷ் 43 : துவங்கியது மாஸ்டர் நாயகியின் அடுத்த படம்!

தனுஷ் 43 : துவங்கியது மாஸ்டர் நாயகியின் அடுத்த படம்!

தனுஷூக்கு கடந்த 2019-ல் அசுரன் மற்றும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படங்கள் வெளியானது. சென்ற வருடம் ஜனவரியில் பட்டாஸ் திரைப்படம் வெளியானது. தனுஷ் நடிப்பில் இந்த வருட முதல் ரிலீஸாக கார்த்திக் சுப்பராஜ் நடிப்பில் ஜெகமே தந்திரம் தயார் நிலையில் இருக்கிறது.

பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படமும், அக்‌ஷய்குமாருடன் உருவாகும் இந்தி படமான அட்ராங்கி ரே படமும் தயாராகிவருகிறது. இந்நிலையில், தனுஷின் 43-வது படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக இருக்கிறது டி43. இப்படத்துக்கு கூடுதல் டயலாக் ரைட்டராக விவேக் பணியாற்றுகிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் துவக்க விழா இன்று சிறப்பாக நடந்தது.

தனுஷின் 43-வது படம் நீண்ட நாளாக துவங்க முடியாமல் இருந்து ஒருவழியாக துவங்கிவிட்டது. இந்தப் படம் துவங்குவது யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, நாயகி மாளவிகா மோகனனுக்கு சந்தோஷமான விஷயம். ஏனெனில், மாஸ்டர் வெளியாகிவிட்டால், மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்துப் பட வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், தனுஷ் படத்தில் ஏற்கெனவே ஒப்பந்தமாகிவிட்டதால், அடுத்தப் படம் கமிட்டாக முடியாது. இந்தப் படமும் துவங்குவது போல தெரியவில்லை என கடுப்பாக இருந்தார். தற்பொழுது படம் துவங்கிவிட்டதால் செம ஹேப்பியில் இருக்கிறார்.

அதுபோல, படத்துக்கு முதலில் மலையாள எழுத்தாளர்கள் படத்தின் திரைக்கதையில் பணியாற்றிவந்தனர். அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டினால் பல சண்டைகள் வந்திருக்கிறது. அதனால், அவர்களை அனுப்பிவிட்டு, விவேக் கூடுதல் திரைக்கதைக்காக இணைந்திருக்கிறார்.

தனுஷ் ஹாலிவுட் படமான க்ரே மேன் படத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படத்துக்கு மாதத்தில் முதல் 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டுமாம். அதனால், டி 43 படப்பிடிப்புக்கு நடுவே ஹாலிவுட் படத்தில் நடித்துவிட்டு திரும்புவார். அதற்கேற்ப ஷூட்டிங் ஷெட்யூலை திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு தான், செல்வராகவன் இயக்கத்தில் தாணு தயாரிக்கும் படத்தில் நடிப்பார் தனுஷ் என்று சொல்லப்படுகிறது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 8 ஜன 2021