மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

ஜப்பானில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்!

ஜப்பானில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்!

ஜப்பானில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அங்கு இரண்டாம் கட்டமாக, பிரதமர் சோஷிஹைட் சுகா அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார்.

உலக நாடுகளில் உருமாற்றம் பெற்ற புதிய வைரஸ் பரவி வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தொடர்ந்து கொரோனா வைரசின் பரவல் அதிகரித்துள்ளது.

ஜப்பானில், டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள சிபா, சைதாமா மற்றும் கனகவா ஆகிய மகாணங்களில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஜப்பானில் மொத்தமாக 2 லட்சத்து 58 ஆயிரத்து 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,791 பேர் உயிரிழந்துள்ளனர் என வேர்ல்டோ மீட்டர் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2447 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

எனவே, இன்று முதல் பிப்ரவரி 7 வரை அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் மது விடுதிகள் இரவு 8 மணிக்கு மூட வேண்டும், உடற்பயிற்சி கூடம், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை குறைந்த நேரங்கள் மட்டுமே செயல்பட வேண்டும். அலுவலகங்கள் 70 சதவிகிதத்திற்கும் குறைவான ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். குறிப்பாகக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்.

தியேட்டர்கள் அருங்காட்சியகங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் அதனால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தமிழகம், டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

வெள்ளி 8 ஜன 2021